1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 13 மே 2024 (08:53 IST)

ஹிஜாப் அணிந்த பெண் இந்தியாவின் பிரதமர் ஆவார்: ஓவைசி ஆவேச பேச்சு..!

ஹிஜாப் அணிந்த பெண் ஒருவர் இந்தியாவின் பிரதமர் ஆவார் என்றும் ஆனால் அதை நான் பார்ப்பேனா என்று தெரியாது, ஆனால் கண்டிப்பாக என் கனவு ஒருநாள் நடக்கும் என்றும் ஓவைசி பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் தொகுதியில் போட்டியிடும் ஓவைசி கடந்த சில நாட்களாக தீவிரமாக பிரச்சாரம் செய்தார். இந்த நிலையில் நேற்று ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த ஓவைசி இந்தியாவின் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பிரதமர் வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது என்றும் இந்திய அரசியலில் அப்படி ஒரு நிகழ்வு கண்டிப்பாக நடைபெறும் என்றும் ஆனால் அந்த வரலாற்று சிறப்புமிக்க தருணத்தை என்னால் நேரடியாக பார்க்க முடியுமா என்று தெரியவில்லை என்றும் கூறினார்

மேலும் பிரதமர் மோடி 75 வயது நிறைவடைந்ததும் பதவியிலிருந்து விலகுவார் என்று நான் நினைக்கவில்லை என்றும் மோடியை அரசியல் ரீதியாக தோற்கடிக்க வேண்டும் என்று தான் நான் நினைக்கிறேன் என்றும் அவர் கூறினார்

ஹிஜாப் அணிந்த முஸ்லிம் பெண் ஒருவர் தான் இந்தியாவின் பிரதமர் ஆவார் என்று ஓவைசி ஆவேசமாக பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva