1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Open-Source Bharat ABIS Tool Developed to Tackle Duplicate IDs

போலி ஆதார் அட்டையை கண்டுபிடிக்க புதிய open-source.. ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு...

பாரத் ஏபிஐஎஸ்
ஆதார் அட்டையில் போலி ஐடிகளைக் கண்டறிந்து நீக்குவதற்காக இந்தியத் தனித்துவ அடையாள ஆணையத்துடன்  தொடர்புடைய ஆராய்ச்சியாளர்கள் 'பாரத் ஏபிஐஎஸ்' என்ற open-source பயோமெட்ரிக் சரிபார்ப்பு முறையை உருவாக்கினர்.
 
 220 மில்லியன் பதிவுகளைக் கொண்டு சோதிக்கப்பட்ட இந்த அமைப்பு, கைரேகை, ஐரிஸ் மற்றும் முகம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஒற்றை டெம்ப்ளேட்டாக மாற்றித் துல்லியமாகச் செயல்படுகிறது. 
 
கோடிக்கணக்கான மக்கள் தொகையைக் கொண்ட பெரிய தரவுத்தளங்களில் போலி அல்லது இரட்டை அடையாளங்களை எளிதில் கண்டறிய இது உதவுகிறது. மேலும், தற்போதைய வணிக முறை மென்பொருட்களை விட இதன் துல்லியத்தன்மை அதிகமாக உள்ளதாகவும், குறைந்த பிழை விகிதத்தைக் கொண்டுள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 
 
சுமார் 160 சிறிய நாடுகளுக்கும் இது பெரிதும் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
மொபைல் ரீசார்ஜ் விதிகளில் அதிரடியான மாற்றங்களை செய்த டிராய்.. இனி 28 நாள் ரீசார்ஜ் இல்லை.. 30 நாள் திட்டம் மட்டுமே...