திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 25 ஜூலை 2024 (16:07 IST)

விமான கட்டண முறைகேடு.! தயாநிதிமாறனுக்கு சபாநாயகர் ஆதரவு.! மக்களவையில் நடந்த சுவாரசியம்..!!

Dayanithimaran
விமான கட்டண முறைகேடுகள் தொடர்பாக திமுக எம்பி  தயாநிதி மாறன் எழுப்பிய கேள்விக்கு சபாநாயகர் ஓம்பிர்லா ஆதரவு தெரிவித்த நிலையில், அது தொடர்பாக உரிய விசாரணை நடத்தபப்டும் என மத்திய அமைச்சர் ராம் மோகன் உறுதி அளித்தார். 
 
மக்களவையில் பேசிய தயாநிதி மாறன்,  விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்கிற போது முதலில் ERROR என வருகிறது என்றும் மீண்டும் முன்பதிவு செய்தால் திடீரென விமான கட்டணம் பல மடங்கு உயர்த்தி காட்டுகிறது என்றும் தெரிவித்தார். குறிப்பாக டாடா விமானங்களில் முன்பதிவு செய்யும் போது இத்தகைய நிலைமை ஏற்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார். 

சென்னையில் இருந்து டெல்லி செல்ல Vistara விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்தேன் என்றும் முதலில் ரூ33,000 செலுத்த முயன்றபோது ERROR என வந்தது என்றும் அடுத்த நொடியே ரூ93,000ஆக உயர்த்திக் காட்டியது என்றும் தயாநிதி மாறன் தெரிவித்தார். விமானப் பயணக் கட்டண பிரச்னைகளை பயணிகள் விமானங்கள் ஒழுங்காற்று அமைப்பு தீர்ப்பதில்லை என்று அவர் கூறினார்.

இதன் பின்னணியில் ஏதோ ஒரு பெரிய சதி இருக்கிறது என்றும் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் தயாநிதி மாறன் கேட்டுக்கொண்டார். அப்போது குறுக்கிட்ட  சபாநாயகர் ஓம் பிர்லா, திமுக எம்பி தயாநிதி மாறன் சுட்டிக்காட்டுவது மிக முக்கியமான பிரச்சனை என தெரிவித்தார்.


இது குறித்து விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் உரிய பதிலளிக்க வேண்டும் என்று அவர் கூறினார். அதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் ராம் மோகன், டாடா விமான டிக்கெட் முன் பதிவு தொடர்பாக உரிய விசாரணை  என உறுதி அளித்தார்.