1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: திங்கள், 30 செப்டம்பர் 2019 (21:34 IST)

மீண்டும் விடுமுறை அறிவித்த டிவிஎஸ்: ஊழியர்கள் அதிர்ச்சி

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை காரணமாக வாகன உற்பத்தி மற்றும் வாகன விற்பனை நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாக பெரும் சரிவை சந்தித்து வருகின்றன. இதனை அடுத்து முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களான அசோக் லேலாண்ட், டிவிஎஸ் ஆகிய நிறுவனங்கள் தங்கள் நிறுவன ஊழியர்களுக்கு விடுமுறை அவ்வப்போது அறிவித்து வந்தது. இதனால் ஊழியர்கள் வேலையின் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர். இந்த விடுமுறை நாட்களுக்கு சம்பளம் வருமா? என்ற கேள்விக்குறியும் எழுந்துள்ளது
 
 
இந்த நிலையில் ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் இரண்டு நாட்கள் வேலை இல்லாத நாளாக அறிவித்த டிவிஎஸ் நிறுவனம் தற்போது நாளையும் அதாவது அக்டோபர் 1ஆம் தேதியும் வேலையில்லாத நாளாக அறிவித்துள்ளது. இதுகுறித்து மும்பை பங்குச் சந்தைக்கு இந்நிறுவனம் கடிதம் ஒன்றையும் அனுப்பி உள்ளது. இதனால் வாகன ஒரு இந்த நிறுவன ஊழியர்கள் நாளை வேலை இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது 
 
 
இதே ரீதியில் சென்றால் வாகன தயாரிப்பு நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் ஊழியர்களின் வேலை கேள்விக்குறியாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து மத்திய அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து வாகன தயாரிப்பு நிறுவனங்களை சரிவில் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.