செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 23 நவம்பர் 2021 (15:04 IST)

கோவாக்சினுக்கு ஒப்புதல் அளித்த இங்கிலாந்து அரசு: இந்தியர்கள் நிம்மதி!

இந்தியாவில் பெரும்பாலானவர்களுக்கு கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின், ஆகிய இரண்டு தடுப்பூசிகள் மட்டுமே செலுத்தப்பட்டு இருக்கும் நிலையில் கோவாக்சின், செலுத்தபட்டவர்கள் இங்கிலாந்து நாட்டில் அனுமதிக்கப்படுவார்கள் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது
 
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசிக்கு இங்கிலாந்து அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது இந்தியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவாக்சின், தடுப்பு ஊசியை எடுத்துக் கொண்டதால் இங்கிலாந்துக்கு செல்ல முடியாமல் தவித்து வந்த இந்தியர்கள் தற்போது நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் நவம்பர் 22 ஆம் தேதி முதல் உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்த அனைத்து கொரோனா வைரஸ் தடுப்பூசிகளுக்கும் ஒப்புதல் அளிக்க உள்ளதாக இங்கிலாந்து அரசு தகவல் தெரிவித்து உள்ளது. எனவே இதுவரை இங்கிலாந்துக்கு செல்ல முடியாமல் தவித்து வந்த இந்தியர்கள் இனி எந்தவித பிரச்சினையும் இல்லாமல் செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது