சதமடித்த மகாராஷ்டிரா... 415 ஆன இந்திய ஒமிக்ரான் பாதிப்பு!
சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவில் தற்போது ஒமைக்கரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 415 ஆகவுள்ளது.
கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் ஒமிக்ரான் பாதிப்பு பரவி வருகிறது என்பதும் படிப்படியாக பரவிய இந்த ஒமிக்ரான் வைரஸ் தற்போது 17 மாநிலங்களில் பரவி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவில் தற்போது 17 மாநிலங்களில் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களின் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
மேலும் பாதிக்கப்பட்டவர்களில் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 108 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் 79, குஜராத்தில் 43, தெலுங்கானாவில் 38, கேரளாவில் 37 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 34 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட 415 பேரில் 115 பேர் முழுமையாக குணமடைந்து விட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மற்றவர்களும் குணமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.