1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 3 பிப்ரவரி 2022 (12:39 IST)

நீங்கள் யார் அனுமதிக்க? ராகுல் காந்தியை விளாசிய சபாநாயகர்!

நீங்கள் யார் அனுமதிக்க? ராகுல் காந்தியை விளாசிய சபாநாயகர்!
பாஜக எம்பியை பேச அனுமதிப்பதாக ராகுல் காந்தி கூறிய உடன் ஒரு எம்பிஐ பேச அனுமதிக்க நீங்கள் யார் என்றும் அது மக்களவைத் தலைவரின் உரிமை என்றும் சபாநாயகர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
பாராளுமன்றத்தில் நேற்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஆவேசமாக பேசிய போது பாஜக எம்பி கமலேஷ் பாஸ்வான் குறித்து ஒரு கருத்தை தெரிவித்தார். அப்போது கமலேஷ் பாஸ்வான் எழுந்து பேச முயன்றபோது சபாநாயகர் ஓம் பிர்லா அதை அனுமதிக்கவில்லை. ராகுல்காந்தி பேசி முடித்து உடன் பேசுங்கள் என்று கூறினார்.
 
அப்போது ராகுல் காந்தி, ‘நான் ஒரு ஜனநாயகவாதி, எனவே கமலேஷ் பாஸ்வான் பேசட்டும் என்று கூறினார். அப்போது ஒரு எம்பியை பேச அனுமதிக்க  நீங்கள் யார் என்றும் அது சபாநாயகரின் அதிகாரம் என்றும் அதில் தலையிட உங்களுக்கு உரிமை இல்லை என்றும் சபாநாயகர் ஓம்பிர்லா பேசியது  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
சபாநாயகர் ராகுல்காந்தியை கண்டித்தது எந்த பிரபல ஊடகத்திலும் செய்தியாக வெளியே வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.