13 வருடமாக தங்கம் வெல்லாத இந்தியா! எதிர்பார்ப்பில் ஒலிம்பிக் போட்டிகள்!

Tokyo Olympics
Prasanth Karthick| Last Modified வெள்ளி, 23 ஜூலை 2021 (12:38 IST)
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில் இந்த முறை இந்தியா தங்கம் வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கொரோனா பிரச்சினைகளுக்கு இடையிலும் திட்டமிட்டபடி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியுள்ளன. இதற்காக உலகம் முழுவதிலுமிருந்து பல ஆயிரம் வீரர்கள் ஜப்பானில் உள்ளனர்.

ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா கடந்த 120 ஆண்டுகளாக பங்கேற்று வரும் நிலையில் இதுவரை 9 முறை மட்டுமே தங்க பதக்கம் வென்றுள்ளது. இறுதியாக கடந்த 2008ம் ஆண்டில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்றார், அதற்கு பிறகு இதுவரை இந்தியா ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லவில்லை. இந்த ஆண்டாவது இந்திய வீரர்கள் தங்கம் வெல்வார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :