வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 19 ஜனவரி 2018 (19:00 IST)

மண் உண்ணாமல் உயிர்வாழ முடியாது; விநோத பழக்கமுடைய தாத்தா!

11 வயதில் வறுமை காரணமாக மண் சாப்பிட துவங்கியவர் தற்போது 100 வயதாகியும் அந்த பழக்கத்தை விடமுடியாமல் தவித்து வருகிறார். மண் உண்ணாமல் உயிர் வாழ முடியாது என்ற நிலையில் இப்போது அவர் இருக்கிறார். 
 
ஜார்க்கண்ட் மாநிலத்தில் வசிக்கும் இந்த தாத்தா 11 வயதில் மண் சாப்பிட துவங்கியுள்ளார். ஒரு நாளைக்கு ஒரு கிலோ மண் வரை சாப்பிட்டு விடுவாராம் இந்த தாத்தா. அவரது 11 ஆம் வயதில் நிதி நிலைமை மிகவும் மோசமாக இருந்ததாலும், போதிய வருமானம் இல்லை என்பதாலும் ஆனால் 10 குழந்தைகளுக்கு சாப்பாடு போட்டாக வேண்டும் என்ற சூழ்நிலையில் இருந்தேன். அப்போதுதான் வறுமையின் காரணமாக இந்த மண் சாப்பிடும் பழக்கம் வந்தது. 
 
ஆனால் நாளாக நாளாக நான் இதற்கு அடிமையாகிவிட்டேன். இப்போது என்னால் மண் சாப்பிடும் பழக்கத்தை விட முடியவில்லை என கூறியுள்ளார். தினசரி மண் சாப்பிடும் வழக்கம் இருந்தாலும் அவருடைய ஆரோக்கியத்தில் எந்த குறையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.