1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. ola scooter customer video viral

அடிக்கடி பழுதான மின்சார பைக்.. ஓலா ஷோரூம் முன் இறுதிச்சடங்கு நடத்திய வாடிக்கையாளர்..!

ஓலா
ஓலா ஷோரூமில் வாங்கிய மின்சார பைக் அடிக்கடி பழுதானத்தை அடுத்து ஷோரூம் முன்பு அந்த பைக்கிற்கு இறுதி சடங்கு நடத்தி ஒப்பாரி வைத்த வாடிக்கையாளரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் ஓலா ஷோரூமில் சாகர் சிங் என்பவர் மின்சார பைக் வாங்கினார். ஆனால் வாங்கியதிலிருந்து அடிக்கடி பைக் பழுதாகி பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஓலா நிறுவனத்தின் மீது புகார் அளித்த நிலையில் அவருடைய புகார் கண்டுகொள்ளப்படவில்லை.

இதனை அடுத்து ஆத்திரமடைந்த சாகர் சிங் ஒரு தள்ளுவண்டியில் மின்சார ஸ்கூட்டரை மாலை மரியாதை உடன் கொண்டு வந்து ஓலா ஷோரூம் முன்பு அதற்கு இறுதி சடங்கு செய்தார். மேலும் மைக்கில் சோக பாடல்களை பாடி ஒப்பாரி வைத்தார்.

இதனால் மக்கள் வேடிக்கை பார்க்க தொடங்கிய நிலையில் ஓலா ஸ்கூட்டரை நோக்கி அவர் ஒப்பாரி பாடியது பரபரப்பை ஏற்படுத்தியது. நான் என்ன குற்றம் செய்தேன்,  ஓலா நிறுவனத்தில் மின்சார பைக் வாங்கியது என்னுடைய தவறா? ஓலா  என்னை தண்டித்து விட்டது, கொள்ளையடித்து விட்டது என்ற பொருளில் அவரது ஒப்பாரி பாடல் இருந்தது. இது குறித்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

Edited by Mahendran
 
அடுத்த கட்டுரையில்
உலக நாடுகளை அச்சுறுத்தும் Mpox வைரஸ்! இந்தியா விமான நிலையங்களில் எச்சரிக்கை ஏற்பாடு!