வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 28 செப்டம்பர் 2019 (14:45 IST)

வரி ஏய்ப்புக்கு உதவிய வருமான வரித்துறை அதிகாரிகள் – கட்டாயப் பணி ஓய்வு !

வரி ஏய்ப்புக்கு உடந்தையாக இருந்த வருமான வரித்துறை அதிகாரிகளுக்குத் தண்டனையாக கட்டாயப் பணி ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரி ஏய்ப்புக்கு உதவியது போன்ற முறையற்ற காரியத்தில் ஈடுபட்ட இந்திய வருவாய் துறை உள்ளிட்ட பலதுறை சேர்ந்த அரசு அதிகாரிகளுக்கு கட்டாய பணி ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய நேரடி வரி விதிப்புத்துறை தெரிவித்துள்ளது.

இது சம்மந்தமாக வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘அதிகாரிகளின் துணையுடன் நடைபெறும் வரி ஏய்ப்பு முறைகேடுகளை கண்டுபிடிப்பது சவாலான காரியமாக இருந்து வருகிறது.அதுபோல குற்ற செயல்களில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு கட்டாய பணி ஓய்வு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் செப்டம்பர் மாதத்தில் 15 அதிகாரிகளும், ஜூன் மாதத்தில் மறைமுக வரி மற்றும் சுங்க வரி ஆணையத் தைச் சேர்ந்த 15 அதிகாரிகளுக்கும், ஜூலையில் 12 அதிகாரிகளுக்கும், ஆகஸ்ட் மாதத்தில் 22 அதிகாரி களுக்கும் கட்டாய பணி ஓய்வு அளிக்கப்பட்டது’ எனத் தெரிவித்துள்ளது.