1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 19 ஜூன் 2022 (12:38 IST)

கல்யாண ஆசை காட்டி கம்பி நீட்டிய எம்.எல்.ஏ! – இளம்பெண் போலீஸில் புகார்!

Odissa MLA
கல்யாணம் செய்து கொள்வதாக நம்பிக்கை அளித்து சேர்ந்து வாழ்ந்துவிட்டு திருமணம் செய்ய மறுப்பதாக எம்.எல்.ஏ மீது இளம்பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

ஒடிசா மாநிலம் திர்டோ சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் 30 வயதான பிஜய் சங்கர் தாஸ். இவர் இளம்பெண் ஒருவரை காதலித்து வந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலே இணைந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்துள்ளனர்.

அதன்படி ஜூன் 17ம் தேதி திருமணம் செய்து கொள்ளலாம் என பிஜய் சங்கர் தாஸ் அந்த பெண்ணிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் இளம்பெண் தனது பெற்றோரோடு நேற்று முன்தினம் திருமண பதிவு அலுவலகம் சென்றுள்ளார். ஆனால் எம்.எல்.ஏ அங்கு வரவில்லை.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த அந்த இளம்பெண் இதுகுறித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், பதிவு திருமணத்திற்கு இன்னும் 60 நாட்கள் உள்ளதாகவும், திருமணம் குறித்து பெண்ணோ, பெண் வீட்டாரோ தன்னிடம் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என்றும் எம்.எல்.ஏ தரப்பில் கூறப்பட்டுள்ளது.