வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 2 ஜூன் 2023 (13:07 IST)

உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக பாஜக அரசு கொண்டுவந்துள்ள சட்டத்தை தோற்கடிக்க வேண்டும்- டெல்லி முதல்வர்

Kejriwal
நாட்டின் தலைநகர் டெல்லியின்  நிர்வாகத்தை யார் கட்டுப்படுத்துகிறார்கள் என்கிற விவகாரம் தொடர்பாக,  டெல்லி அரசுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் கடந்த மே 11 ஆம் தேதி தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பு ஆளும்   மத்திய பாஜக அரசுக்கு அதிர்ச்சியளித்த நிலையில்,  உடனடியாக உச்ச நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்யும் விதமாக அவசர சட்டம் ஒன்றை பிறப்பித்துள்ளது.

இதற்கு அரசியல் எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், டெல்லி மாநில முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், ‘’உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக பாஜக அரசு கொண்டுவந்துள்ள சட்டம், சட்ட மசோதாவாக நாடாளுமன்றத்தில்  கொண்டு வரும்போது, அனைத்து எதிர்க்கட்சிகளும் அதனை தோற்கடிக்க வேண்டும்.

இந்த அவசர சட்டம் மக்களவையில் நிறைவேறும் என்றாலும், மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்தால் அந்த மசோதவை தோற்கடிக்கலாம். இதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளையும் சந்தித்து ஆதரவு கோரி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், பாஜக அல்லாத மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்கள் தங்களுக்கு ஆதரவளித்துள்ளனர்’’ என்று  அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று  முதல்வர் முக.ஸ்டாலின் இல்லத்தில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.