இரட்டை கோபுர கட்டடம் தகர்க்கப்பட்ட பாதிப்பு எவ்வளவு? நொய்டா நகர தலைமை அதிகாரி பேட்டி
நொய்டாவில் இன்று மதியம் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட நிலையில் இதனால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து நொய்டா தலைமை அதிகாரி பேட்டி அளித்துள்ளார்.
நொய்டாவில் அனுமதியின்றி கட்டப்பட்ட 40 அடுக்குமாடி குடியிருப்புகள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. இந்த கட்டிடம் இடிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து தலைமை நிர்வாக அதிகாரி பேட்டி அளித்துள்ளார்
இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட பகுதியில் பெரிய அளவு பாதிப்பு எதுவும் இல்லை என்றும் ஏற்கனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதால் அந்த பகுதி மக்களுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை என்று தகர்க்கப்பட்ட பகுதிகளுக்கு மாலை ஆறு முப்பது மணிக்கு மேல் மக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தற்போது பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் கூறினார்