1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 10 ஆகஸ்ட் 2019 (08:04 IST)

வாக்குச்சீட்டுக்கு திரும்ப முடியாது: தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளான காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தெலுங்குதேசம், திமுக, ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் தேர்தலில் வெற்றி பெறும்போது வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து எந்தவிதமான குற்றச்சாட்டும் கூறுவது கிடையாது. ஆனால் தோல்வி அடையும் போது மட்டும் மின்னணு வாக்குப்பதிவில் முறைகேடுகள் நடப்பதாகவும், வாக்குச்சீட்டு முறைக்கு தேர்தல் ஆணையம் திரும்ப வேண்டும் என்றும் புகார்கள் தெரிவித்து, கோரிக்கைகளும் விடுவித்து வருகின்றன.
 
இந்த நிலையில் அரசியல் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று வாக்குச்சீட்டு முறைக்கு மீண்டும் திரும்ப முடியாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தனது கருத்தை தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாட்டை ஆதரித்து சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பை தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது
 
அரசியல் கட்சிகள் தேர்தல் முடிவின் போது மீண்டும் வாக்குச்சீட்டு முறை திரும்ப வேண்டும் என்று சுட்டிக் காட்டுவது குறித்து அறிக்கை ஒன்றில் குறிப்பிட்ட இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, உச்சநீதிமன்றம் ஒருமுறைக்கு பலமுறை வாக்குச்சீட்டு முறை என்பது கடந்த கால முறை என்றும், நிகழ்கால முறைக்கு ஒத்து ஒத்து வராது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே உச்ச நீதிமன்றத்தின் அறிவுரையின்படி கடந்த காலத்திற்கு திரும்ப தேர்தல் ஆணையம் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார் 
 
மேலும் ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்துவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் உள்துறை அமைச்சகம், சட்ட அமைச்சகம் ஆகியவை எழுத்துபூர்வமாக உத்தரவிட்டால் மட்டுமே அங்கு தேர்தல் நடத்த முடியும்' என்று கூறியுள்ளார்