திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 19 மே 2019 (07:26 IST)

கமல் கட்சியின் பட்டன் வேலை செய்யவில்லை: சூலூர் வாக்குப்பதிவு மையத்தில் சிக்கல்!

இன்று மக்களவை தேர்தலின் 7வது கட்ட வாக்குப்பதிவு 8 மாநிலங்களில் 59 தொகுதிகளில் சற்றுமுன் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது வாக்கினை இன்று காலை 7 மணிக்கு பதிவு செய்தார்
 
இந்த நிலையில் தமிழகத்தில் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டப்பேரவை 
தொகுதிகளிலும் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு சற்றுமுன் தொடங்கியது. இந்த நான்கு தொகுதிகளிலும் வாக்காளர்கள் காலை முதல் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் சூலூர் தொகுதியில் உள்ள கருமத்தம்பட்டி என்ற பகுதியில் மாதிரி வாக்குப்பதிவின்போது வாக்கு இயந்திரத்தின் 2 பட்டன்கள் வேலை செய்யவில்லை. இந்த தொகுதியின் 116வது வாக்குச்சாவடியில் மக்கள் நீதி மய்யம், உழைப்பாளி மக்கள் கட்சியின் பட்டன் வேலை செய்யாததால் அதிகாரிகள் குழப்பம் அடைந்தனர்.

கருமாத்தம்பட்டியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறினால் வாக்குப்பதிவு தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரத்தில் இயங்காத 2 பொத்தான்களை சரிசெய்யும் முயற்சியில் அதிகாரிகள் தீவிரமாக இருப்பதாகவும் இன்னும் சில நிமிடங்களில் இந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது