வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 28 டிசம்பர் 2021 (11:01 IST)

5 மாநில தேர்தல் ஒத்திவைப்பு இல்லை: தேர்தல் ஆணையம் தகவல்!

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் ஒமிக்ரான் பாதிப்பு காரணமாக தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தி நிலையில் 5 மாநிலங்களில் தேர்தலை ஒத்திவைக்க போவதில்லை என தேர்தல் ஆணையம் கூறியிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது 
 
உத்தர பிரதேசம் உத்தரகாண்ட் கோவா பஞ்சாப் மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் வரும் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது.
 
இந்த நிலையிலும் தற்போது இந்தியாவில் ஒமிக்ரான் தீவிரமாக பரவி வருவதால் திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது. 
 
இந்த நிலையில் தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் ஒமிக்ரான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால் திட்டமிட்டபடி தேர்தலை நடத்த முடிவு செய்திருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
 
ஒமிக்ரான் மிக வேகமாக பரவி வந்தாலும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை என சுகாதார செயலாளர் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.