1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 25 ஜூலை 2022 (20:31 IST)

ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் தேசியக்கொடி ஏன் இல்லை? பிரதமர் மோடிக்கு அசாம் எம்.எல்.ஏ கேள்வி!

modi
வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி நாடு முழுவதிலும் உள்ள வீட்டில் இந்திய சுதந்திர கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி கூறியிருக்கும் நிலையில் பிரதமர் மோடியின் பின்புலமான ஆர்எஸ்எஸ் அலுவலகத்திலேயே தேசியக்கொடி இல்லை என அசாம் மாநில எம்எல்ஏ இஸ்லாம் அவர்கள் கருத்து தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
பிரதமர் மோடியின் பின்புலமாக ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் இன்று வரை தேசியக்கொடி ஏற்றப்படவில்லை என்றும், நாடு முழுவதும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பு வேஷத்திற்காக என்று நினைக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்
 
அவரது இந்த கருத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பேசிய போது ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடியை ஏற்ற கூறியது குறித்து அசாம் எம்எல்ஏ இஸ்லாம் கருத்து கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.