செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 25 ஜூலை 2022 (20:21 IST)

போனி கபூரை சந்தித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: ரஜினியின் அடுத்த படத்தை தயாரிக்கின்றாரா?

aiswarya boney
போனி கபூரை சந்தித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: ரஜினியின் அடுத்த படத்தை தயாரிக்கின்றாரா?
அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் ஏகே 61 ஆகிய மூன்று தமிழ் படங்களை தயாரித்த போனிகபூர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை சந்தித்து உள்ளார் 
 
மும்பையில் போனிகபூர் வீட்டில் இந்த சந்திப்பு நடந்ததாகவும் இந்த சந்திப்பின்போது போனிகபூர் அவர்களுடன் இணைந்து காபி அருந்தியதாகவும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படங்களுடன் கூடிய ஒன்றை பதிவு செய்துள்ளார்
 
இதனை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படத்தை போனிகபூர் தயாரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
 
தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு போனிகபூர் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.