வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 25 மார்ச் 2024 (18:03 IST)

மொய் வேண்டாம்..! மோடிக்கு வாக்களியுங்கள்..! வைரலாகும் திருமண பத்திரிகை..!!

Wedding Modi
மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாக்களிக்குமாறு திருமண பத்திரிகை அடிக்கப்பட்ட சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் மக்களவை தேர்தலில் பா.ஜ.க, காங்கிரஸ், சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ். கட்சிகளிடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இங்கு பா.ஜ.க. 17 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. மேலும் தீவிர பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் பிரதமர் மோடிக்கு ஓட்டு போடுங்கள் என கூறி திருமண பத்திரிகை வினியோகம் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கானா சங்கரெட்டியை சேர்ந்த ஒருவர் அவரது மகன் திருமணத்திற்கு பத்திரிகை அடித்துள்ளார்.

 
அந்த அழைப்புதழில் புதுமண தம்பதிகளுக்கு பரிசு பொருட்கள் எடுத்து வர வேண்டாம் என்றும் மொய் எழுத வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர். அதற்கு பதிலாக தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாக்களியுங்கள் என்றும் நீங்கள் நரேந்திர மோடி ஜிக்கு வாக்களித்தால் அதுவே இந்த திருமணத்திற்கான பரிசு என்றும் திருமணப் பத்திரிகையில் பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் அச்சிடப்பட்டுள்ளது. இந்த திருமண பத்திரிகை சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.