ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (12:51 IST)

வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம் இல்லை: மீண்டும் ஏமாற்றம்

ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு மாதச் சம்பளதாரர்கள் இடையே ஏற்படும் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் இந்த ஆண்டும் அதே எதிர்பார்ப்பில் இருந்த நிலையில் வருமான வரி உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்
 
வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றம் இல்லை என்றும் உச்ச வரம்பு ரூ 2.5 லட்சம் ஆகவே தொடரும் என்றும் நாட்டின் நன்மைக்காக இதை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்
 
குறைந்தபட்சம் வருமான வரி உச்சவரம்பு 3 லட்சமாக உயர்த்த பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் எந்தவித மாற்றமும் இல்லை என்பது ஏமாற்றம் அளிப்பதாக கருத்து தெரிவிக்கப்பட்டு வருகின்றன