புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 8 டிசம்பர் 2020 (19:40 IST)

நாளை எனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம்: சோனியா காந்தி!

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 9ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தியின் பிறந்தநாளை காங்கிரஸ் கட்சியினர் விசேஷமாகக் கொண்டாடி வருகிறார்கள் 
 
ஆனால் நாளை வரவுள்ள தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தங்கள் உரிமைக்காக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நேரத்தில் எனது பிறந்தநாள் கொண்டாட்டம் தேவையில்லை என்றும் விவசாயிகளுக்காக தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார் 
 
சோனியா காந்தியின் இந்த பதிவை அடுத்து காங்கிரஸ் கட்சியினர் நாளை அவருடைய பிறந்தநாளை கொண்டாடவில்லை என்று அறிவித்துள்ளனர்