ஜேடியூவின் 14 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா.. நிதிஷ்குமார் முதல்வர் பதவிக்கு ஆபத்தா?
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் ஜேடியூ கட்சியில் உள்ள 14 எம்எல்ஏக்கள் திடீரென ராஜினாமா செய்து உள்ளதை அடுத்து அவரது முதல்வர் பதவி பறிபோக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் துணை முதல்வராக இருக்கும் தேதஸ்வி யாதவ் புதிய முதல்வராகும் நிலைமை உண்டாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக நிதீஷ் குமார் மற்றும் லாலு பிரசாத் யாதவ் ஆகிய இருவருக்கும் கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் நிதிஷ்குமார் மீண்டும் பாஜக கூட்டணிக்கு திரும்புவார் என்றும் இந்தியா கூட்டணியில் இருந்து விலகுவார் என்றும் கூறப்படுகிறது
இந்த நிலையில் திடீரென ஜேடியூ கசியின் எம்எல்ஏக்கள் 14 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து உள்ளதை அடுத்து நிதீஷ் குமாரின் முதல்வர் பதவி பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்படி ஒரு நிலைமை வந்தால் துணை முதல்வராக இருக்கும் தேஜஸ்வி யாதவ் முதல்வர் பதவியை ஏற்பார் என்று கூறப்படுகிறது.
Edited by Siva