வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 6 ஜூன் 2024 (11:20 IST)

நிர்மலா சீதாராமனுக்கு அமைச்சர் பதவி இல்லையா? ஆனாலும் தமிழருக்கு தான் நிதித்துறை..!

nirmala
நடைபெற்ற முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை கூட்டணி வெற்றி பெற்ற மீண்டும் ஆட்சி அமைக்க உள்ள நிலையில் புதிய அமைச்சரவையில் சில புதிய வரவுகள் இருக்கும் என்றும் ஏற்கனவே அமைச்சர்களாக உள்ளவர்கள் சிலர் வெளியேற்றப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. 
 
குறிப்பாக நிதி அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமனுக்கு அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பு இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் ஒரு தமிழருக்கு தான் அமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
தற்போது அந்த தமிழர் எம்பி ஆக இல்லை என்றாலும் அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டு ஆறு மாதத்தில் அவர் எம்பி ஆவார் என்றும் அதற்கான காய்களை அவர் நகர்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
நிர்மலா சீதாராமன் மட்டுமின்றி வேறு சில பழைய அமைச்சர்களுக்கும் அமைச்சர் பதவி கிடைக்காது என்றும் புதிய அமைச்சரவையில் கிட்டத்தட்ட பாதி பேர் புதிய அமைச்சர்களாக இருப்பார்கள் என்றும் அது மட்டும் இன்றி கூட்டணி கட்சிகள் எம்பிகளுக்கும் அமைச்சர் பதவி கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. 
 
Edited by Mahendran