செவ்வாய், 18 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 11 ஏப்ரல் 2024 (17:44 IST)

தேர்தல் பரப்புரைக்காக தமிழ்நாடு வருகிறார் நிர்மலா சீதாராமன்! ஆனால் 3 தொகுதிகளில் மட்டும் தான்..!

nirmala
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக பிரச்சாரம் செய்து வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். 
 
அதுமட்டுமின்றி தமிழகத்திற்கு தேசிய தலைவர்களும் வந்து கொண்டிருக்கின்றனர் என்பதும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உள்பட பலர் வருகை தந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் அடுத்த கட்டமாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டிற்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் சிதம்பரம், தஞ்சை மற்றும் கோவை ஆகிய பகுதிகளில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது 
 
நாளை வரும் நிர்மலா சீதாராமன் இந்த மூன்று தொகுதிகளிலும் தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்வார் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து மேலும் சில பாஜக தலைவர்களும் காங்கிரஸ் தலைவர்களும் வருகை தருவார்கள் என்றும் பிரியங்கா காந்தி உள்பட பல பிரபலங்கள் தமிழ்நாட்டை நோக்கி அடுத்தடுத்து சில நாட்களில் வர இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran