1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 24 ஜூலை 2024 (13:29 IST)

பெயரை குறிப்பிடாவிட்டால் ஒரு மாநிலம் புறக்கணிப்பு என அர்த்தமா? நிர்மலா சீதாராமன்

nirmala
நேற்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்பட சில மாநிலங்களின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்று எதிர் கட்சி எம்பிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் பட்ஜெட்டில் ஒரு மாநிலத்தின் பெயர் குறிப்பிடாவிட்டால் அந்த மாநிலம் புறக்கணிப்பதாக அர்த்தமா என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பி உள்ளார்.
 
பட்ஜெட் அறிவிப்பில் அனைத்து மாநிலங்களின் பெயர்களையும் குறிப்பிட முடியாமல் போகலாம், ஆனால் அந்த மாநிலங்களுக்கு திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை என்று எடுத்துக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார்.
 
மகாராஷ்டிரா மாநிலம் வாதாவன் பகுதியில் துறைமுகம் அமைக்க நிதி ஒதுக்கி இருக்கிறோம், ஆனால் மகாராஷ்டிரா என்ற பெயரை பட்ஜெட்டில் குறிப்பிடவில்லை, அதனால் மகாராஷ்டிரா புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது என்று கூற முடியுமா என்று தெரிவித்தார் 
 
மேலும் இது ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனியான பட்ஜெட் கிடையாது என்றும் ஒட்டுமொத்த இந்தியாவுக்கான பட்ஜெட் என்பதால் அனைத்து மாநிலங்களுக்கும் பயன்பெறும் வகையில் தான் பட்ஜெட்டில் உள்ள திட்டங்கள் உள்ளன என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
 
Edited by Siva