1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 8 ஆகஸ்ட் 2024 (17:59 IST)

மருத்துவ காப்பீடு பிரீமியம் மீது 18 % ஜி.எஸ்.டி.. நிர்மலா சீதாராமன் பதிலால் எதிர்க்கட்சிகள் கப்சிப்..!

Nirmala
மருத்துவ காப்பீட்டுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி வசூல் செய்வதை ரத்து செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி எம்பிக்கள் பாராளுமன்றத்தில் பேசிய நிலையில் அதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் கூறியவுடன் எதிர்க்கட்சி எம்பிகள் அமைதியாகிவிட்டதாக கூறப்படுகிறது.

மக்களவையில் மருத்துவ காப்பீடு பிரீமியம் மீது 18 சதவீத ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி எம்பிகள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கைக்கு பதில் அளித்து பேசி நிர்மலா சீதாராமன் ’மருத்துவ காப்பீடு பிரீமியம் மீதான 18 சதவீத ஜிஎஸ்டி வரி வசூலில் 75 சதவீதம் மாநிலங்களுக்கு செல்வதாக குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் நிதி அமைச்சர்கள் இந்த 18 சதவீத வரி விதிப்பை ரத்து செய்யும்படி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பரிந்துரை செய்தால் கண்டிப்பாக ரத்து செய்யப்படும் என்றும் அந்த 75% ஜிஎஸ்டி வசூலை இழக்க அவர்கள் தயாரா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இதனை அடுத்து மருத்துவ காப்பீட்டு பிரீமியம் மீது 18 சதவீத ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்த எதிர்க்கட்சி எம்பிகள் அமைதியானதால் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran