கனிமொழியை அடுத்து நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய் வசந்த்.. முக்கிய கோரிக்கை..!
திமுக எம்பி கனிமொழி சில மணி நேரங்களுக்கு முன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தமிழகத்தின் சார்பில் சில கோரிக்கைகளையும் தூத்துக்குடி எம்பி என்ற முறையில் தூத்துக்குடியில் தொகுதிக்கு தேவைப்பட்ட சில கோரிக்கைகளையும் முன்வைத்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் கனிமொழியை அடுத்து தற்போது கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சற்றுமுன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா நிர்மலா சீதாராமன் சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது ஜிஎஸ்டி வரி, வங்கி கடன், விலைவாசி உயர்வால் தவிக்கும் மக்களின் நலன் கருதி சில கோரிக்கைகளை அவர் முன்வைத்துள்ளார். குறிப்பாக விவசாயிகள், மீனவர்கள், நடுத்தர மக்களை பாதிக்கும் விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் ஏழை மாணவர்களுக்கு வங்கிகளில் இருந்து கல்வி கடன் பெற்று அவர்களுடைய கல்வியை தொடர வழிவகை செய்ய வேண்டும் என்றும் இந்த கல்வி கடனை அடைப்பதற்கு மாணவர்கள் அவர்களுடைய பெற்றோர் சிரமப்படுவதால் வட்டியில்லா கடன் வழங்க முன்வர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
கல்வி உபகரணங்கள், கல்வி சேவை மீதான ஜிஎஸ்டி வரிவை குறைக்க வேண்டும் என்றும் அத்தியாவசிய பொருட்கள் மீதான வரியை குறைத்து விலைவாசியை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்றும் விஜய் வசந்த், நிர்மலா சீதாராமனிடம் கேட்டுக் கொண்டார்.
Edited by Mahendran