வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 12 ஜனவரி 2024 (13:54 IST)

நிர்மலா சீதாராமன், ஜெயசங்கர்.. 2 தமிழர்களும் போட்டியிடும் தொகுதிகள் எவை எவை?

மக்களவைத் தேர்தல் வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் பாஜகவில் இப்போதே வேட்பாளர் தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக மத்திய அமைச்சரவையில் நிர்மலா சீதாராமன் மற்றும் ஜெய்சங்கர் ஆகிய இரண்டு தமிழர்கள் இருக்கும் நிலையில் இருவருமே தமிழகத்தில் போட்டியிடவில்லை என்று கூறப்படுகிறது.  

தென் சென்னையில் நிர்மலா சீதாராமன் போட்டியிடுவார் என்று கூறப்பட்டாலும் அவர் பாதுகாப்பான தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என பாஜக மேலிடம் விரும்புவதாகவும், அதனால் நிர்மலா சீதாராமன் கர்நாடக மாநிலத்தில் பாஜக செல்வாக்காக உள்ள  தட்சிண கன்னடா என்ற தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

அதேபோல் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கர்நாடகாவில் உள்ள உத்தர கன்னட என்ற தொகுதியை ஒதுக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடி இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவார் என்றும் அதில் ஒன்று தமிழகத்தில் இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் தருகிறது.

மேலும் அமைச்சர் அமித்ஷா உள்பட முக்கிய அமைச்சர்கள் ஏற்கனவே போட்டியிட்ட தொகுதியில் தான் போட்டியிடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி மீண்டும் போட்டியிடுவார் என்பதால் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் மட்டும் போட்டியிடுவார் என தெரிகிறது.

Edited by Siva