நிர்பயா குற்றவாளியின் கருணை மனு நிராகரிப்பு..
நிர்பயா குற்றவாளி பவன் குப்தா கருணை மனு நிராகரிப்பு
நிர்பயா குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அவரது மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.
முன்னதாக நிர்பயா குற்றவாளிகளான அக்ஷய் குமார் சிங், முகேஷ் சிங், வினய் ஷர்மா ஆகியோர் மறு சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தனர். எனினும் அவர்களின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
அதே போல் குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா, குற்றம் புரிந்தபோது தனக்கு 16 வயது என்பதால் சிறார் தண்டனை சட்டத்தின் வழக்கின் கீழ் தன்னை விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் இவரது மனு இன்று உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. ஏற்கனவே மார்ச் 3 ஆம் தேதி 4 குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற வேண்டும் என உத்தரவு இடப்பட்டது.
இதனையடுத்து பவன் குமார் குப்தா சார்பில் ஜனாதிபதியிடம் இன்று மதியம் கருணை மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் குற்றவாளியின் மனுவை ஜனாதிபதி நிராகரித்துள்ளார். இதன் மூலம் நாளை நால்வருக்கும் தூக்கு உறுதியாகிறது.