மகாராஷ்டிராவை அடுத்து கர்நாடகத்திலும் இரவு நேர ஊரடங்கா? முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை!
இந்தியாவிலேயே மிக அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் மாநிலமான மகாராஷ்டிராவில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இரவு 8 மணி முதல் காலை 7 மணிவரை அம்மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பதும் நேற்று ஒரே நாளில் அம்மாநிலத்தில் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தை அடுத்து கர்நாடகாவிலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த மாநில அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இது குறித்து முதல்வர் எடியூரப்பா இன்று முக்கிய ஆலோசனை செய்ய இருப்பதாகவும் இந்த ஆலோசனைக்கு பின் இரவு நேர ஊரடங்கு குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாகிக் கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக நேற்று கர்நாடகாவில் சுமார் 3000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது