1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 29 அக்டோபர் 2021 (19:27 IST)

புனித் ராஜ்குமாரின் இழப்பு தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பு - முதல்வர் இரங்கல்!

நடிகர் புனித் ராஜ்குமார் மறைவுக்கு முதல்வர் இரங்கல்!
 
இன்று 11:30 மணிக்கு மாரடைப்பால் பாதிக்கப்பட்ட நடிகர் புனித் ராஜ்குமார் ஒரு சில மணி நேரங்களில் காலமானார் என்ற செய்தியை திரையுலகினரை மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கியுள்ளது. 46 வயதில் ஒரு திறமையான நடிகரின் மறைவை ஜீரணிக்கவே முடியவில்லை என்று பலர் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். 
 
இந்த நிலையில் கன்னட திரையுலகின் சகாப்தமான ராஜ்குமாரின் மகனான புனித் ராஜ்குமார், எனது குடும்பத்துடன் நல்லுறவு கொண்டவர் என்றும் புனித் ராஜ்குமாரின் இழப்பு தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பு எனவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார். கன்னட திரையுலகத்துக்கு புனித் ராஜ்குமாரின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு அவர் கூறியுள்ளார்.