புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 27 செப்டம்பர் 2021 (09:38 IST)

மோடி வந்தால்தான் தடுப்பூசி போடுவேன்: அடம்பிடித்த கிராமவாசி!

பிரதமர் மோடி வந்தால் தான் தடுப்பூசி போடுவேன் என கிராமவாசி ஒருவர் அடம்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தடுப்பூசி செலுத்த சென்ற போது அங்கு உள்ள கிராமவாசி ஒருவர் மட்டும் தடுப்பூசி செலுத்த முடியாது என மறுத்து விட்டார்
 
பிரதமர் மோடியை அழைத்து வாருங்கள் அவர் இங்கு வந்தால் தான் நான் தடுப்பூசி போட்டுக் கொள்வேன் என்று அவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அந்த நபரை எவ்வளவோ சமாதானப்படுத்தியும், பிரதமர் வந்தால் மட்டுமே தான் ஊசி போடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது
 
இந்த நிலையில் கிராமவாசியை சமாதானப்படுத்த பிரதமர் அந்த கிராமத்திற்கு செல்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்