திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 15 பிப்ரவரி 2021 (22:18 IST)

டெலிமார்க்கெட்டிங் மூலம் தொல்லை கொடுத்தால் அபராதம்: மத்திய அரசு அதிரடி

டெலிமார்க்கெட்டிங் மூலம் தொல்லை கொடுத்தால் அபராதம்
டெலி மார்க்கெட்டிங் மூலம் தொல்லை கொடுத்தவருக்கு அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
போன் வைத்திருப்பவர்களுக்கு ஏற்படும் தொல்லைகளில் ஒன்று டெலி மார்க்கெட்டிங் செய்பவர்கள். தேவையில்லாமல் அழைப்பு விடுத்து பேசிக் கொண்டிருப்பது, தங்களுடைய பொருள்களை விளம்பரப்படுத்தவும் இன்சூரன்ஸ், முதலீடு உள்ளிட்ட பல விஷயங்களுக்காக டெலிமார்க்கெட்டிங் அழைப்பாளர்கள் முக்கிய நேரங்களில் அழைத்து தொல்லை தருவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது 
 
இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி டெலி மார்க்கெட்டிங் மூலம் தொல்லை கொடுத்தால் அபராதம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி தொடர்ந்து இதேபோல் ஈடுபட்டால் இணைப்பும் துண்டிக்கப்படும் என்றும் விரும்பத்தகாத வர்த்தக தகவல்கள் தொலைபேசி அழைப்புகளை தடுக்க மத்திய அரசு இந்த திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது
 
இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் தரப்பிலிருந்து மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது