1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (16:03 IST)

மக்களுக்கான புதிய டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை –!

’இ ரூபி’ என்ற புதிய  டிஜிட்டல் பணப்பரிவர்த்தை வசதியை பிரதமர் மோடி அறிமுகம் செய்யவுள்ளார்.

உலகில் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்துவரும் நிலையில் மக்களின் வசதிகளுக்கு ஏற்ப நேரத்தையும் அலைச்சலையும் மிச்சம் செய்யும் வகையில் பல்வேறு வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே டிஜிட்டர் பணப்பரிவர்த்தனைக்கான பேடிஎம், ரூபே உள்ளிட்ட நிறுவனங்கள் வெற்றிகரமாக செயல்பட்டுவருகின்றன.

இந்நிலையில், இ-ரூபி என்ற நேரடி மின்னுப் பணப்பரிவர்த்தனை திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைக்கவுள்ளார். இதன் மூலம் மக்களுக்கான திட்டங்கள் மக்களிடமெ சென்றடையும் எனக் கூறப்படுகிறது.