வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 7 செப்டம்பர் 2022 (08:51 IST)

வைகையில் கரை புரளும் வெள்ளம்; போக்குவரத்து மாற்றம்!

Vaigai
கடந்த சில நாட்களாக கேரளா, தமிழக பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால் வைகை நதியில் நீர்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக கேரளா மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால் வைகை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் வைகை ஆற்றில் ஏற்கனவே தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

இந்நிலையில் மேலும் 15 ஆயிரம் கன அளவிற்கு வைகை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மதுரையின் போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கரையின் இரு கரைகளும் வெள்ளம் தொட்டு செல்லும் நிலையில் கோரிப்பாளையம், யானைக்கல், மதிச்சியம், தரைப்பாலம், தென்கரை, வடகரை சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.