தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் வெளியீடு
- சென்னை பல்கலைக்கழக இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு அறிவிப்பு !
- மீண்டும் கொரோனா சோதனை – சி எஸ் கே அணிக்கு சாதகமான முடிவுகள்!
- சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு கொரொனா பரிசோதனை முடிவு வெளியானது ! ரசிகர்கள் திக்..திக் திக்
- திட்டமிட்ட தேதிகளில் தேர்வு நடைபெறும்! – தேசிய தேர்வு முகமை!
நீட் தேர்வு முடிவு எப்போது? தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
பெரும் சர்ச்சைகளை அடுத்து நாடு முழுவதும் நீட்தேர்வு சமீபத்தில் நடைபெற்றது என்பதும் இந்த நீட்தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் நீட் தேர்வு முடிவுகள் எப்போது என்ற புதிய தகவல் தற்போது வெளிவந்துள்ளது. கடந்த 13ஆம் தேதி நடைபெற்ற தேர்வில் 15 லட்சம் மாணவர்கள் எழுதிய நிலையில் இந்தத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்த தகவலை தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது
இதன்படி நீட் தேர்வு முடிவுகள் தயாரிக்கக்கூடிய பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் ஒரு வாரத்திற்குப் பின்னர் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த மாத கடைசியில் அல்லது அக்டோபர் முதல் வாரம் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
