1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (18:07 IST)

நீரவ் மோடியை நாடு கடத்த இங்கிலாந்து ஒப்புதல்!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 14 ஆயிரம் கோடி மோசடி செய்துவிட்டு லண்டனுக்கு தப்பி ஓடியவர் குஜராத் மாநிலத்தை சேர்ந்த நீரவ் மோடி. கடந்த 2018 ஆம் ஆண்டு லண்டனுக்கு தப்பிச் சென்ற நிலையில் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்று இந்திய அரசு கோரிக்கை விடுத்து வந்தது. இதுகுறித்த வழக்கும் லண்டன் நீதிமன்றத்தில் நடந்து வந்தது
 
கடந்த 3 ஆண்டுகளாக லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் தற்போது தான் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறைக்கு வெற்றி கிடைத்திருக்கும் வகையில் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது 
 
நீரவ் மோடியை நாடு கடத்த சமீபத்தில் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையி தற்போது இங்கிலாந்து அரசும் அவரை நாடு கடத்த ஒப்புக் கொண்டுள்ளது. இங்கிலாந்து உள்துறை அமைச்சர் இந்த ஒப்புதலை வழங்கியுள்ளதாக சிபிஐ தகவல் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து அவர் இன்னும் ஒரு சில நாட்களில் இந்தியாவுக்கு நாடு கடத்த படுவார் என்றும் அதன்பின் அவர் மீது வழக்கு பதிவு செய்து சிபிஐ விசாரணை செய்யும் என்று கூறப்படுகிறது 
 
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 14 ஆயிரம் கோடி மோசடி செய்ததாக ஏற்கனவே நீரவ் மோடி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது