வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 5 செப்டம்பர் 2021 (15:34 IST)

ரவிசாஸ்திரிக்கு கொரோனா உறுதி: வீரர்கள் அனைவருக்கும் சோதனை!

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் 
 
இதனை அடுத்து பந்துவீச்சு பயிற்சியாளர், பீல்டிங் பயிற்சியாளர் மற்றும் பிசியோதெரபி ஆகிய மூவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் வீரர்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணியின் 4வது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் இந்த பரிசோதனை முடிந்த பிறகு இன்றைய போட்டி ஆரம்பமாகும் என்றும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணின் 3 விக்கெட்டுகளை இழந்து 270 ரன்கள் எடுத்துள்ளது என்பதும் ரோஹித் சர்மா சதமடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது