1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva

பொதுத்துறை வங்கிகளில் 24 மணி நேர டிஜிட்டல் சேவை: ரிசர்வ் வங்கி

banks
அனைத்து பொதுத்துறை வங்கிகளில் இருபத்தி நான்கு மணி நேர டிஜிட்டல் சேவை வழங்க இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியதை அடுத்து அனைத்து பொதுத்துறை வங்கிகளிலும் விரைவில் 24 மணி நேரத்தில் சேவை வழங்க உள்ளன 
 
இதன் மூலம் இனி அனைத்து பொதுத்துறை வங்கிகளிலும் வங்கி கணக்கு தொடங்குதல், பணம் டெபாசிட் செய்தால், பணத்தை எடுத்தல், வாடிக்கையாளர் சுய விவரங்களை திருத்துதல், கடன் கேட்டு விண்ணப்பம் செய்தல் ஆகிய சேவைகளை டிஜிட்டல் முறையில் 24 மணி நேரமும் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம்  செலவினங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
ஏற்கனவே தனியார் வங்கிகளில்  24 மணி நேர டிஜிட்டல் சேவை வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.