வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 7 மார்ச் 2023 (15:15 IST)

நாகலாந்து முதலமைச்சராக 5 வது முறையாக நெய்பியு ரியோ பதவியேற்பு

nagaland cm
நாகலந்து மாநிலத்தில் சமீபத்தில் சட்டசபைத் தேர்தல் நடந்தது. இதில், என்.டி.பி.பி மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் நெய்பிபு ரியோ 5 -வது முறையாக முதல்வராகப் பதவியேற்றுள்ளார்.

நாகலாந்து  மாநிலத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. 60 சட்டசபைத் தொகுதிகளுக்கு நடந்த இத்தேர்தலில், பாஜக 12 இடங்களிலும், கூட்டணி கட்சியான என்.டி.பி.பி கட்சி 25 இடங்களிலும் வெற்றி பெற்றது.

இதன்படி, கூட்டணி கட்சிகளின் சார்பில், என்.டி.பி.பி கட்சியைச் சேர்ந்த நெய்பியு ரியோ  5 வது முறையாக முதல்வராகப் பதவியேற்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, இன்று நாகலாந்தில் உள்ள  கோஹிமா நகரில் இன்று முதல்வர் பதவியேற்கும் நிகழ்ச்சி தொடங்கியது. இதில், ரியோ முதல்வராகப் பதவியேற்று, ரகசியக் காப்பு பிரமாணமும் எடுத்துக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, அம்மா நில கவர்னர் இல. கணேஅஸ்ன், பாஜக தேசிய தலைவர் ஜேபி, நட்டா அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா ஆகியோர் கலந்துகொண்டனர்.