திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 17 ஜூன் 2017 (11:55 IST)

400 வருட சாபம் நீங்கி மைசூர் இளவரசி கர்ப்பம்!!

400 வருட சாபம் நீங்கி மைசூர் இளவரசி கர்ப்பமாக உள்ளார் என்ற செய்தி வெளியகியுள்ளது. கர்நாடக மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
1399 ஆம் ஆண்டு முதல் மைசூரு பகுதியை உடையார் வம்ச மன்னர்கள் ஆண்டு வந்தனர். திருமலைராஜாவின் ஸ்ரீரங்கபட்டிணம் மீது 1610 ஆம் ஆண்டு முதலாம் ராஜ உடையார் போர் தொடுத்தார். 
 
போரில் தோற்றதால் தலக்காடு எனும் நகரில் திருமலைராஜா குடிபெயர்ந்தார். அப்போது நோயால் பாதிக்கப்பட்ட திருமலைராஜா மரணமடைந்தார். 
 
இதை பயன்படுத்திக்கொண்டு திருமலைராஜாவின் 2வது மனைவி மீது உடையார் மன்னர் ஒருவர் ஆசை கொண்டாராம். இதனால் திருமலைராஜாவின் 2வது மனைவி தற்கொலை செய்துகொண்டார்.
 
அப்போது அவர் மைசூர் ராஜ வம்சத்திற்கு குழந்தைகள் பிறக்க கூடது என சாபம் விட்டதாக 400 வருட வரலாரூ கூறுகிறது. இதன் காரணமாக அன்று முதல் இன்று வரை மைசூர் ராஜ குடும்பத்துக்கு நேரடியாக எந்த வம்சமும் இல்லாமல் இருந்து வந்தது.
 
இந்நிலையில், உடையார் மன்னர் வம்சத்தின் கடைசி மன்னரான சாமராஜ உடையார் மகன் ஸ்ரீகண்டதத்த நரசிம்ம ராஜ உடையாருக்கும் திரிஷிகா குமாரி தேவிக்கும் திருமணம் நடந்தது. 
 
தற்போது, திரிஷிகா குமாரி நான்கு மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம் 400 வருட சாபம் நீங்கியதாக மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.