செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 15 ஏப்ரல் 2021 (08:20 IST)

பாஜகவால் மேற்கு வங்கத்தில் கொரோனா அதிகமாகிவிட்டது… மம்தா பானர்ஜி தாக்கு!

மேற்கு வங்கத்தில் பாஜகவால் தான் கொரோனா பாதிப்பு அதிகமாகிவிட்டதாக முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் 8 கட்டமாக தேர்தல் நடப்பதால் பாஜகவின் முக்கியத் தலைவர்களான மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் அங்கு பல நாட்கள் சென்று பிரச்சாரம் செய்கின்றனர். அவர்களுக்கு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இடையே அடிக்கடி வார்த்தை மோதல்கள் வெடிக்கின்றன.

இந்நிலையில் நேற்று பிரச்சாரத்தில் பேசிய மம்தா ‘மேற்கு வங்கத்தில் கொரோனா பரவல் ஆரம்பித்த போது பிரதமரோ உள்துறை அமைச்சரோ வரவில்லை. ஆனால் இப்போது தேர்தல் இருப்பதால் அவர்கள் வெளியாட்களைக் கொண்டுவந்து இங்கே கொரோனா வைரஸ் பரவலை அதிகமாக்கியுள்ளனர். வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். ஆனால் அவர்கள் அதனைக் கடினமாக்குகின்றனர்.’ என்று கூறியுள்ளார்.