வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 29 டிசம்பர் 2017 (08:55 IST)

ஹிந்து குழந்தைகளை தத்தெடுத்த முஸ்லிம்கள்

ஜம்மு காஷ்மீரில் தாய் தந்தையை இழந்து தவித்து வந்த ஹிந்து மதத்தைச் சேர்ந்த நான்கு குழந்தைகளை முஸ்லிம்கள் தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர்.
ஜம்மு காஷ்மிர் மாநிலத்தில் லீவ்டோரா என்ற கிராமத்தில் பாபி கவுல்(40) என்பவர் வசித்து வந்தார். கணவனை இழந்த இவர் தனது நான்கு குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவர் இந்து மதத்தை சேர்ந்தவர். வறுமையில் வாடிய இவருக்கு அங்கு வசிக்கும் முஸ்லிம் மக்கள் வேலை வாங்கிக் கொடுத்தனர். உடல் நலக்குறைவால் சமீபத்தில் பாபி கவுல் இறந்தார். அவரது நான்கு குழந்தைகளும் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டனர். 
 
இதனையடுத்து அந்த கிராமத்தைச் சேர்ந்த அனைத்து முஸ்லிம்களும் இணைந்து இறந்த பாபி கவுலின் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க முடிவு செய்தனர். குழந்தைகளின் பள்ளி படிப்பு, உணவு மற்றும் பராமரிப்பு செலவு முழுவதையும் கிராம மக்களே ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளனர். 

மதவாதம் பற்றி சர்ச்சையாக பேசி, மக்களுக்குள் மதக் கலவரத்தை உருவாக்க நினைக்கும் ஒரு சில அரசியல்வாதிகளுக்கு இந்நிகழ்ச்சி ஒரு பாடமாய் அமையட்டும்.