வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 16 டிசம்பர் 2023 (10:50 IST)

பணம் கொடுக்காத தாய் கொலை! பிணத்தை சூட்கேஸில் வைத்து ரயிலில் சென்ற நபர்!

பீகாரில் பெற்ற தாயை கொன்று உடலை சூட்கேஸில் வைத்து மகன் எடுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரதிமா தேவி. இவருக்கு 20 வயதில் ஹிமான்ஷு என்ற மகன் உள்ளார். ஹிமான்ஷு அடிக்கடி பணம் கேட்டு தாயை தொல்லை செய்து வந்துள்ளார். சமீபத்தில் ரூ.5 ஆயிரம் கேட்டு தாய் பிரதிமா தேவியை தொல்லை செய்துள்ளார். ஆனால் பிரதிமா தேவி பணம் தர மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஹிமன்ஷு தனது தாயை அடித்துக் கொன்றுள்ளார். பின்னர் அந்த பிணத்தை எடுத்து ஒரு சூட்கேஸில் வைத்து பிரயாக்ராஜில் உள்ள ரயில் நிலையம் வந்துள்ளார். அங்கிருந்து திரிவேணி சங்கமம் சென்று உடலை வீச திட்டமிட்டுள்ளார்.

ஆனால் சூட்கேஸுடன் சந்தேகத்திற்கு இடமான வகையில் அவர் நிற்பதை பார்த்த போலீஸார் அவரை பிடித்து சோதித்தபோது சூட்கேஸில் பிணம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக அவரை கைது செய்து பிணத்தை உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். பணத்திற்காக பெற்ற தாயை மகனே கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K