வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 8 மே 2024 (13:20 IST)

சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 19 வயது இளைஞர் பரிதாப பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

Shawarma
சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட ஒரு சிலர் உடல் நல பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர் என்றும் சிலருக்கு உயிர் போகும் அளவுக்கு ஆபத்து ஏற்பட்டு வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் மும்பையில் உள்ள 19 வயது இளைஞர் ஷவர்மா சாப்பிட்ட நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையை சேர்ந்த 19 வயது இளைஞர் பிரதமேஷ் என்பவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு உள்ளார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்ற நிலையில் அவரது உடல்நிலை மிகவும் மோசமானதை அடுத்து அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்

அங்கு அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டு அதே மருத்துவமனையில் அழைத்துச் செல்லப்பட்ட போது சிகிச்சையின் பலன் இன்றி உயிரிழந்தார்

இதனை அடுத்து இது குறித்து விசாரித்த போது அவர் மும்பையில் உள்ள ஒரு கடையில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டதாகவும் அதனை அடுத்து தான் அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதாகவும் தெரியவந்தது. இதனை அடுத்து சிக்கன் ஷவர்மா கடை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இரண்டு விற்பனையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Edited by Siva