வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 15 நவம்பர் 2021 (10:25 IST)

பிச்சை எடுக்க வந்த கங்கனா... மும்பை பெண் மேயர் விளாசல்!

சுதந்திரம் குறித்து சர்ச்சை கருத்து கூறிய கங்கனாவிற்கு, மும்பை பெண் மேயர் கிஷோரி பெட்னேகர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 
இந்தியில் பல படங்களில் நடித்து வரும் கங்கனா ரனாவத் தமிழில் சமீபத்தில் வெளியான தலைவி படத்தின் மூலம் பிரபலமனார். இவர் சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் சமீபத்தில் பெற்றார்.

இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கங்கனா ரனாவத், இந்தியாவிற்கு 1947ல் கிடைத்தது வெறும் பிச்சைதான். இந்தியாவிற்கு உண்மையான சுதந்திரம் 2014ல் தான் கிடைத்துள்ளது என பேசினார். பாஜக ஆதரவாளரான கங்கனா பாஜக ஆட்சியமைத்ததைதான் அப்படி குறிப்பிடுகிறார் என்று பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 
சுதந்திரம் குறித்து சர்ச்சை கருத்து கூறிய கங்கனாவிற்கு, மும்பை பெண் மேயர் கிஷோரி பெட்னேகர் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, மும்பையில் (பாலிவுட்) பிச்சை எடுப்பதற்காக இங்கு கங்கனா வந்தார். அவருக்கு தேவையான பிச்சை இங்கு கிடைத்தது. மற்றவர்களுக்கு அவர் என்ன சொல்ல வருகிறார்? சுதந்திரம் குறித்து கங்கனா கூறிய கருத்துக்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். 
 
உண்மையில், அவர் மன்னிப்பு கேட்பதற்கு கூட தகுதியற்றவர். பொய்களின் ராணியாக உலா வந்து கொண்டிருக்கிறார். அவரது கருத்துகள் எடுபடாது என தெரிவித்துள்ளார்.