1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 12 நவம்பர் 2021 (01:05 IST)

2014ல் தான் இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்தது: கங்கனா ரனாவத்

நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி இந்தியாவிற்கு வந்த பின்னர் தான் இந்தியாவிற்கு உண்மையான சுதந்திரம் கிடைத்தது என்று பிரபல நடிகை கங்கனா ரனாவத் கூறியுள்ளார் 
 
நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி 2014 இல் வந்தது என்றும் அதன் பின்னர் தான் இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்தது என்றும் பேட்டி ஒன்றில் நடிகை கங்கனா கூறியுள்ளார் 
 
1947 ஆம் ஆண்டு கிடைத்த சுதந்திரம் போலியான சுதந்திரம் என்றும் அந்த சுதந்திரத்தால் எந்தவித பயனும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். கங்கனா ரனாவத் அவர்களின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது