இந்த வாரத்தின் 3வது நாளிலும் பங்குச்சந்தை நிலவரம் எப்படி?
கடந்த வாரமும் இந்த வாரத்தின் முதல் இரண்டு நாட்களிலும் பங்குச்சந்தை மிக வேகமாக சரிந்து வந்ததை அடுத்து லட்சக்கணக்கான கோடிகளை பங்குச் சந்தையில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் இழந்தனர் என்பதை பார்த்தோம்
இந்த நிலையில் பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்து வரும் பங்குச் சந்தை இன்றும் சரிந்துள்ளது கூடுதல் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது
இன்று காலை பங்கு சந்தை தொடங்கியவுடன் சுமார் 130 புள்ளிகள் சரிந்து 52695 என்ற புள்ளிகளில் வழக்கமாகி வருகிறது
அதே போல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி சுமார் 40 புள்ளிகள் சரிந்து 15700 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. பங்குச்சந்தை தொடர்ந்து சரிந்து வருவது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.