செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 13 ஜூன் 2022 (15:58 IST)

பாதாளத்தில் சென்செக்ஸ்?? 1,733 புள்ளிகள் சரிவு!

மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் தற்போது 1,733 புள்ளிகள் சரிந்து 52,570 புள்ளிகளில் வணிகமாகிறது. 

 
இந்திய பங்குச்சந்தையின் மும்பை சென்செக்ஸ் கடந்த சில நாட்களாக சரிந்து வருவதை பார்த்து வருகிறோம். இதனால் முதலீட்டாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் இந்த வாரத்தின் முதல் நாளான இன்று பங்கு சந்தை திறக்கப்பட்ட உடன் சுமார் 1350 புள்ளிகள் சரிந்ததால் முதலீட்டாளர்கள் கடும் அச்சம் அடைந்தனர். ஆம், காலையில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 1350 புள்ளிகள் சரிந்து 52 ஆயிரத்து 950 என்ற நிலையில் வர்த்தகமானது. அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி சுமார் 375 புள்ளிகள் சரிந்து 15,825 என்ற நிலையில் இருந்தது. 
 
பங்கு சந்தை தொடர்ந்து சரிந்து வருவதால் பங்கு சந்தையில் முதலீடு செய்பவர்கள் லட்ச கணக்கில் நஷ்டம் அடைந்தனர். இதனைத்தொடர்ந்து மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் தற்போது 1,733 புள்ளிகள் சரிந்து 52,570 புள்ளிகளில் வணிகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 507 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 15,695 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
 
இதே போல கடந்த சில நாட்களுக்கு முன்னர் 949 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்ட எல்ஐசி பங்குகள் தற்போது 675க்கும் கீழ் வர்த்தமாகி வரும் நிலையில் முதலீட்டாளர்கள் கடும் கலக்கத்தில் உள்ளனர்.